பணியாளர்கள் வரவு குறைவு எனினும் துறைமுக, விமான நிலைய செயற்பாடுகள் வழமை

நாடு தழுவிய ரீதியாக பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள போதிலும் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் என்பவற்றின் செயற்பாடுகள் வழமை போன்று

இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் குறைந்தளவான பணியாளர்களே நேற்று பணிக்கு சென்றதாக துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று காலை மாத்திரம் 5 சரக்கு கப்பல்கள் வந்தன.

அதில் உள்ள கொள்கலன்களை தரையிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் வழமை போன்று நேற்று காலை முதல் சேவையில் ஈடுபட்டன.

Fri, 04/29/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை