தரையிறக்கும்போது விபத்து: இரண்டாகப் பிளந்த விமானம்

கோஸ்டா ரிக்கா விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கிய போயிங் 757-200 சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து விலகிய அந்த டி.எச்.எல் விமானம், இரண்டாகப் பிளந்தது.

விமானிகளுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதி துண்டிக்கப்பட்டது. அதன் ஓர் இறக்கை உடைந்தது

குவான்தமலாவுக்குப் புறப்பட்ட அந்த விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் விமானம் புறப்பட்ட சற்றுநேரத்திலேயே அவசரமாகத் தரையிறங்க நேர்ந்தது.

விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டி.எச்.எல் கூறியது.l

Sun, 04/10/2022 - 09:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை