ஈக்வடோர் சிறை கலவரம்: இருபது பேர் உயிரிழப்பு

தெற்கு ஈக்வடோர் சிறை ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலவரத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டு சிறைகளில் இடம்பெறும் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

'உயிரிழந்த 20 பேரின் உடல்களும் குயென்கா நகரில் தடயவியல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன' என்று ஜனாதிபதி கிலெர்மோ லசோவின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குயென்காவில் உள்ள எல் டூரி சிறையில் ஏற்பட்ட இந்த மோதலில் ஐந்து கைதிகளின் உடல்கள் சிதைக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் பட்ரிசியோ கரிலோ தெரிவித்துள்ளார். தற்போது இந்தக் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலைகளில் ஏற்படும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஈக்வடோர் அண்மைய ஆண்டுகளில் போராடி வருகிறது. பொதுவாக குற்றக் கும்பல்களுடன் தொடர்புட்ட இந்த கலவரங்களில் 2021 இல் 320 கைதிகள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/05/2022 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை