நேபாளத்தில் அந்நிய செலாவணி வீழ்ச்சி: இறக்குமதிக் கட்டுப்பாடு

அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததை அடுத்து கார்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தங்கம் உட்பட அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நேபாளத்தில் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசின் கடனை செலுத்துவதற்கு உதவும் சுற்றுலா வருவாய் மற்றும் வெளிநாட்டில் வேலை புரியும் நேபாளியர்கள் அனுப்பும் பணம் வீழ்ச்சி அடைந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் கடந்த வாரம் பதவி நீக்கப்பட்டார்.

இலங்கையின் நெருக்கடியுடன் இந்தப் பிரச்சினையை ஒப்பிடுவது பற்றி தாம் அதிர்ச்சி அடைவதாக நேபாள நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி நடுப்பகுதி வரை ஏழு மாதங்களில் வெளிநாட்டு நாணய கையிருப்பு 16 வீதத்துக்கு சரிந்து 1.17 டிரில்லியன் நேபாள ரூபாவாக உள்ள (9.59 பில்லியன் அமெரிக்க டொலர்) என்று நேபாள மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ள நோபளியர் அனுப்பிய பணம் சுமார் 5 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

நாட்டின்ஔஅந்நியச் செலாவணி அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக நிறுவனம் நம்புகிறது என்று நேபாள மத்திய வங்கியின் பிரதம ஊடகப்பேச்சாளர் நாராயன் பிரசாத் ரோய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

“அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தை பாதிக்காத வகையில் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். முழுமையான கட்டணத்தையும் செலுத்துவதாக இருந்தால் 50 ஆடம்பர பொருட்களை கொண்டுவர அனுமதி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

“இது இறக்குமதியை தடை செய்வதல்ல அதனை பலவீனப்படுத்துவதாகும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

எனினும் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் நேபாளத்தின் கடன் குறைவாக உள்ளது என்று அந்நாட்டு நிதி அமைச்சர் ஜனார்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். “மக்கள் ஏன் இலங்கையுடன் ஒப்பிடுகிறார்கள் என்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்றும் கூறினார்.

Wed, 04/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை