மிரிஹான பகுதியில் போராட்டம் நடத்த முற்பட்ட நபர் மின்சாரம் தாக்கி பலி

- போராட்டத்தில் பலியான முதல் நபர்

மிரிஹான பகுதியில் மின்மாற்றியின் மீது ஏறி போராட்டம் நடாத்த முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

53 வயதான ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மின்மாற்றியை கொண்ட.கணுவின் மீது போராட்டம் நடாத்த முற்பட்ட வேளையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் போராட்டங்களில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sun, 04/03/2022 - 17:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை