வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 5 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வாழ்வதற்கான இல்லறம் செயற்றிட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மேலும் ஐந்து குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாாிஸ் மற்றும் வன்னி ஹோப் நிறுவனத்தின் பணிப்பாளர்களான கே. கந்தகுமாா் மற்றும் வைத்தியர் மாலதி வரன் ஆகியோர்களின்  பங்குபற்றுதலுடன் நேற்று முன்தினம் (13) இடம்பெற்றது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மிக நீண்டகாலம் மண் குடிசைகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வந்த ஐந்து குடும்பங்களுக்கு இந்த நிரந்தர வீடுகள் நிர்மாணித்து வழங்கப்பட்டது. திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட விளாங்குளம் மீள்குடியேற்றக் கிராமத்தில் உள்ள மூன்று குடும்பங்களுக்கும்  ஆத்திமோட்டை கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்திற்கும் கிண்ணியா பாரதிபுரம் கிராமத்தில் உள்ள மற்றொரு குடும்பத்திற்குமே மேற்படி நிரந்தர வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் வாழ்வதற்கான இல்லம் எனும் செயற்றிட்டத்தின் கீழ் வீடுகள் அற்று மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின்  கீழ் இதுவரை சுமாா் 35 வீடுகள் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஸ்பர்

Fri, 04/15/2022 - 08:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை