இலங்கையை வந்தடைந்தது 40,000 மெ. தொன் டீசல்

இந்திய கடனுதவியின் ஒரு பகுதியாக வழங்கல்

இலங்கைக்கு இந்தியா அறிவித்த கடன் வசதியின் ஒரு பகுதியான 40,000 மெற்றிக் தொன் டீசல் நேற்று இலங்கையை வந்தடைந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் அரசாங்கம் இந்தியாவின் உதவியை நாடியது. நிதியமைச்சர் பசில்

ராஜபக் ஷ, இந்திய பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்து உரையாடியபோது இக்கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக 40,000 மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அக்கப்பல் நேற்று இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தியா அனுப்பிய டீசல் இன்று இரவு இலங்கை முழுவதும் விநியோகிக்கப்படும் என தெரியவருகிறது.

Mon, 04/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை