எதிர்கால வைரஸ் பரவலுக்கு புதிய நிதியை அமைக்க ஜி20 நாடுகள் நடவடிக்கை

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய வைரஸ் தொற்றுச் சூழல்களை உலகம் இன்னும் மேம்பட்ட நிலையில் சமாளிக்க ஏதுவான புதிய நிதியை அமைக்க, ஜி20 உறுப்பு நாடுகள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளன.

அமெரிக்காவும் இந்தோனேசியாவும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த நிதி, உலக வங்கியில் வைக்கப்படக்கூடும். எனினும் அத்தகைய நிதியை அமைப்பது, உலக சுகாதார  அமைப்பை அல்லது மற்ற சர்வதேச சுகாதார அமைப்புகளைப் பலவீனமடையச் செய்யும் என்ற அக்கறைகள் நிலவுகின்றன.

ஜி20 உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் எதிர்வரும் ஜூன் மாதத்தில் சந்திக்கும்போது நிதி குறித்த விபரங்களை முடிவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜி20 அமைப்பு, எவ்வளவு நிதியைத் திரட்ட விரும்புகிறது என்பது தெரியவில்லை.

வைரஸ் பரவல் தயார்நிலைக்காக ஆண்டுதோறும் சுமார் 10.5 பில்லியன் டொலர் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பும் உலக வங்கியும் முன்னதாக மதிப்பிட்டன.

நிதி தொடர்பான முடிவுகளை எடுக்கும் பொறுப்பில் தனக்குப் பங்கிருப்பது முக்கியம் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

Sun, 04/24/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை