கொவிட்-19: ஷங்ஹாய் நகரில் மூவர் உயிரிழப்பு

சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

89 மற்றும் 91 வயதுக்கு இடைப்பட்ட தடுப்பூசி பெறாதவர்களே உயிரிழந்திருப்பதாக அந்த நகர சுகாதார ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நகரின் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 38 வீதமானவர்களே முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதாக ஷங்ஹாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் அந்த நகர் மீண்டும் முழுமையாக கொரோனா சோதனையை எதிர்கொண்டிருப்பதோடு நகரில் பெரும்பாலான மக்கள் நான்காவது வாரமாக கடுமையான பொது முடக்கத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை பதிவான மரணங்கள் கடந்த 2020 மார்ச் மாதத்திற்கு பின்னர் ஒட்டுமொத்த நாட்டிலும் உத்தியோகபூர்வமாக அறியப்பட்ட கொரோனா தொடர்பான முதல் மரணங்களாக உள்ளன.

சீனாவில் அண்மையில் ஏற்பட்டிருக்கு கொரோனா தொற்று அதிகரிப்பு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான எண்ணிக்கையாக உள்ளது.

எனினும் அந்த நாடு கொரோனா தொற்றை முற்றாக ஒழிக்கும் திட்டங்களை செயற்படுத்துவதோடு, இதற்காக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/19/2022 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை