19+ உள்ளடக்கிய திருத்தத்தை கொண்டுவருவதே சிறந்தது

நிருவாக சேவை சங்கம் அரசுக்கு ஆலோசனை

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு விரைவான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்பின் 19வது திருத்தத்திற்கு அப்பால் 19+ உள்ளடக்கப்பட்டு 21 ஆவது திருத்தத்தை விரைவாக கொண்டுவருவது அவசியம் என இலங்கை நிருவாக சேவை சங்கம் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு சபையை மீண்டும் புத்துயிர்க்கச் செய்வது, ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் நபராக விளங்கவேண்டியது, சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பளிக்கும் ஜனாதிபதியிடமுள்ள அதிகாரத்தை இல்லாமல் செய்வது, ஜனாதிபதியின் ஆளணி எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மற்றும் அமைச்சின் செயலாளர்களை நியமிப்பதை முறைப்படுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாக அந்தத் திருத்தம் அமையவேண்டுமென மேற்படி சங்கம் கேட்டுக்கொண்டுள்ளதுடன் அதுதொடர்பான யோசனைகளையும் அந்த சங்கம் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் முன்வைத்துள்ளது.

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் தலைவர் ரோஹண டி சில்வா உள்ளிட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்கள் இந்த ஆலோசனைகளை முன்வைத்துள்ளனர். (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

Tue, 04/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை