கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா தமிழகத்தில் பறிமுதல்

சட்டத்தரணி உட்பட 4 பேர் கைது

 

வேதாரண்யத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 147 கிலோ கஞ்சா மற்றும் 02 கார்களை பறிமுதல் செய்த தமிழ்நாடு பொலிஸார், சட்டத்தரணி ஒருவர் உட்பட 04 பேரை கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் வழியாக புதன்கிழமை இரவு கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தப்படவுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்தது. வேதாரண்யம் பொலிஸார் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அதன்போது அந்த வழியாக வந்த 02 கார்களை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் பொலிஸார் 02 கார்களையும் சோதனையிட்டனர். அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 02 கார்களிலிருந்த 04 பேரையும் கைது செய்து வேதாரண்யம் பொலிஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, இலங்கைக்கு கடத்திக் கொண்டுச் செல்லப்பட்ட 147 கிலோ கஞ்சா, அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 02 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவத்தில் ஈடுபட்ட சட்டத்தரணி ஒருவர் உட்பட 04 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Fri, 04/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை