நான்கு அகதிப் படகுகள் மூழ்கியதில் 12 பேர் பலி

120 ஆபிரிக்க குடியேறிகள் மற்றும் அகதிகளை ஏற்றிய நான்கு படகுகள் துனீஷிய கடற்பகுதியில் மூழ்கிய நிலையில் குறைந்தது 12 பேர் உயிரிழந்திருப்பதோடு மேலும் 10 பேர் காணாமல்போயுள்ளனர். இவர்கள் மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலி செல்ல முயற்சித்திருப்பதாக துனீஷிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்பெக்ஸ் கடற்கரைக்கு அப்பால் 98 பேர் மீட்கப்பட்டதாக துனீஷிய கடலோர காவல் படையின் லெப்டினன்ட் கேணல் ஒருவரான அலி ஆயரி தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து போர் மற்றும் வறுமை காரணமாக ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் மக்கள் புறப்படும் பிரதான மையமாக எஸ்பெக்ஸ் கடற்கரை மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் துனீஷிய கடற்கரையில் இருந்து 20,000க்கும் அதிகமான குடியேறிகள் மற்றும் அகதிகள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டது. 2021இல் குறைந்தது 15,000 பேர் இத்தாலி கடற்கரையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 04/25/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை