மேலும் 04 இலங்கையர் தமிழகத்தில் தஞ்சம்

புகலிடம் கோரி வந்ததாக தெரிவிப்பு

மன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் புகலிடம் கோரி தமிழ்நாட்டின் தனுஷ்கோடி பகுதியை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் முத்தரிப்புத்துறையைச் சேர்ந்த தம்பதியினர் தமது 10 வயதான மகள் மற்றும் இரண்டரை வயதான மகனுடன் படகொன்றில் புறப்பட்டு நேற்று (08) அதிகாலை சுமார் 02 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களை தமது பொறுப்பில் எடுத்துள்ள இராமேஸ்வரம் கடலோர காவல்துறை, மண்டபம் கடலோர காவல்நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணைக்கு பின்னர் நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்களென மண்டபம் கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். (விரிவான செய்தி 09 ஆம் பக்கம்)

 

 

Sat, 04/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை