ஏப்ரல் 04 மின்வெட்டு: ABCDEFGHIJKL | PQRSTUVW: 5 மணி நேரம்; CC1: 4 மணி நேரம்

- 7 மணித்தியாலங்களிலிருந்து 4 - 5 மணித்தியாலங்களாக குறைப்பு

நாளையதினம் (04) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC1 ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் 4 மற்றும் 5 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை (04) மின்வெட்டு:
அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 4 - 5 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW: 5 மணித்தியாலங்கள்
- மு.ப. 10.00 - பி.ப. 5.00 வரை 3
½ மணித்தியாலங்கள்
- பி.ப. 6.00 - இரவு 9.00 வரை 
 மணித்தியாலங்கள்

CC1 : 
- மு.ப. 6.00 - பி.ப. 10.00 மணி வரை 4 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நாளையதினம் (04) 7 மணித்தியால மின்வெட்டுக்கு இ.மி.ச. கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் அதனை நிராகரித்த ஆணைக்குழு, அதனை 5 மணித்தியாலங்களுக்குள் குறைக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.
(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

Sun, 04/03/2022 - 22:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை