ஜனாதிபதி- TNA பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த விசேட பேச்சுவார்த்தை ஒத்திப்போடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒத்திப்போடப்பட்டுள்ள பேச்சுவார்த்தை மீண்டும் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 10 மணிக்கு நடைபெறுவதற்கான ஒழுங்குகள்  செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் மேற்படி பேச்சுவார்த்தையின்போது கலந்துரையாடப்படவிருந்ததாகவும் எவ்வாறெனினும் இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 03/16/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை