கொவிட் PCR சோதனை குறைக்கப்படவில்லை

வெளியாகிய செய்திக்கு அமைச்சு மறுப்பு

கொவிட் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்த கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்தமைக்கு பரிசோதனை எண்ணிக்கை குறைவே காரணம் என எழுந்த குற்றச்சாட்டுக்களுக்கு சுகாதார அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.

கொவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வீழ்ச்சியுடன் பரிசோதனை எண்ணிக்கையும் குறைவது வழமையானது என சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவன்துடாவ தெரிவித்துள்ளார்.

பீ.சீ.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகளுக்கு கேள்வி நிலைமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் மரணங்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், பூஸ்டர் தடுப்பூசி 50 வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ள காரணத்தினால் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Thu, 03/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை