LIOC நிறுவனம் பெற்றோல் விலைகளை ரூ. 49 இனால் அதிகரிப்பு

- Octane 92: ரூ. 303
- Octane 95: ரூ. 332

LIOC நிறுவனம் இன்று நள்ளிரவு (26) முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலைகளையும்  ரூ. 49 இனால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

பெற்றோல்
- ஒக்டேன் 92: ரூ.254 இருந்து ரூ.303 (ரூ.49ஆல்)
- ஒக்டேன் 95: ரூ.283 இருந்து ரூ.332 (ரூ.49ஆல்)

அதற்கமைய புதிய விலைகள்
- Octane 92: ரூ. 303
- Octane 95: ரூ. 332

டீசல் விலையில் இதுவரை எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LIOC நிறுவனம் கடந்த மார்ச் 11ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் (CEYPETCO) எரிபொருட்களின் விலையை ரூ 55 முதல் 95 வரை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வலுவிழந்தமையே எரிபொருள் விலைகளை அதிகரிப்பதற்கான காரணமென LIOC நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இன்றையதினம் (25), இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்த நாணயமாற்று விகிதங்களின் அடிப்படையில் டொலரின் விற்பனை விலை ரூ. 294.99 என பதிவாகியிருந்தது.

ஆயினும் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள தனியார் வர்த்தக வங்கிகளில் அதன் விலை ரூபா 300 மற்றும் அதற்கு மேற்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Fri, 03/25/2022 - 22:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை