IMF பரிந்துரைகளில் சில நாட்டில் ஏற்கனவே அமுலில் உள்ளன இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையை ஆராய்ந்துள்ள இலங்கை மத்திய வங்கி அதில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிந்துரைகள் இப்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

மேற்படி அறிக்கையானது சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இலங்கை பொருளாதாரம் தொடர்பில் நீண்ட மற்றும் உள்ளார்த்தமான ஆய்வுகளின் பின் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 21ம் திகதி முதல் இலங்கை நிதிக்கொள்கையை கடினப்படுத்தியுள்ளமை, சட்ட ரீதியான சதவீதத்தை நிர்வகிக்காமை, வெளிநாட்டு கையிருப்பு சந்தையில் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக நிலவும் எல்லைகளை விலக்குவது,  முக்கிய வர்த்தகப் பொருட்களின் விலைகள் சந்தையில் அதிகரித்துள்ளமை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டே சில நடவடிக்கைகளை தற்போது இலங்கை நடைமுறைப்படுத்திவருவதாகவும் மத்திய வங்கி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை இலங்கையானது சர்வதேச நாணய நிதியத்துடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கு தயாராகவுள்ளதுடன் மேற்படி நாணய நிதியத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் தயாராக உள்ளதாக மத்திய வங்கி தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. (ஸ)

(லோரன்ஸ் செல்வநாயகம்|)

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை