ஒரு மில்லியன் Gas சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்க தயார்

அடுத்த 10 நாட்களுக்குள்

லிற்றோ நிறுவனம்

ஒரு மில்லியன் எரிவாயு சிலிண்டர்களை அடுத்த 10 நாட்களுக்குள் சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் 3,600 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று(24) நாட்டை வந்தடைந்ததாக அந் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (23) நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகவும் அந்த எரிவாயு தொகையை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிவாயுவிற்கான நெருக்கடி நிலையை முடிவுக்கு வர இன்னும் ஒரு வாரம் செல்லும் என லிற்றோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Fri, 03/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை