ரஷ்யாவில் ரூபிள் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிள் நாணயம் 30 வீதம் வீழ்ச்சி கண்டதை அடுத்து ரஷ்யா தனது முக்கிய வட்டி வீதத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.

ரூபிள் சரிவினால் விலைவாசியில் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவும் வகையில் வட்டி வீதம் 9.5 இல் இருந்து 20 வீதமாக உயர்த்தப்பட்டதாக ரஷ்ய வங்கி தெரிவித்துள்ளது. மேற்குலக நிதிச் சந்தைகளில் இருந்து ரஷ்ய வங்கிகளை துண்டிக்க அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனும் நடவடிக்கை எடுத்ததை அடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய பதற்றம் காரணமாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலையும் 100 டொலருக்கு மேல் உச்சம் கண்டுள்ளது.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை