வடக்கில் சூரிய சக்தி மூலம் அரச நிறுவன செயற்பாடுகள்

வட மாகாண ஆளுநர் ஜீவன் ஏற்பாடு

வடக்கில் சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி செயல்படுத்தவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிதி அமைச்சரால் நாட்டின் பொது இடங்களில் மின்சார பயன்பாட்டை 20 சதவீதமாகக் குறைக்குமாறு சகல உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மின்சார பயன்பாட்டை சிக்கனமாக்குவதற்கு வடக்கு மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி (சோலார்) தொகுதி மூலம் பெறப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள முடியும். ஆகவே எதிர்காலத்தில் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

 பருத்தித்துறை விசேட நிருபர்

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை