பொதுச் சபை அவசர கூட்டம்

உக்ரைனில் ரஷ்ய படையெடுப்பு குறித்து 194 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட ஐ.நா பொதுச் சபையின் மிக அரிதான அவசரக் கூட்டம் ஒன்று நேற்று இடம்பெற்றது.

இந்த அவசரக் கூட்டத்தை கூட்டுவது தொடர்பில் பாதுகாப்புச் சபையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாக்கெடுப்பில் 11 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ரஷ்யா இதற்கு எதிராக வாக்களித்தபோதும் ஐ.நா விதிகளின்படி இந்த விடயத்தில் அதற்கு வீட்டோ அதிகாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான 11 பொதுச் சபை அவசரக் கூட்டங்கள் இதுவரை இடம்பெற்றிருப்பதாக இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

1 கருத்துகள்

புதியது பழையவை