அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு குறித்து ஆராய்வு

கண்காணிக்க விசேட வேலைத்திட்டம்

சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நிலவுகின்றதா என்பது தொடர்பில், கண்காணிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை முன்னெடுத்துள்ளது.

நிதியமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ணவினால் பிரதேச செயலகங்களின் ஊடாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள வர்த்தக நிலையங்களில் அரிசி, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு தொடர்பில் ஆராயவுள்ளன.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் பல கென்டய்னர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளன.

இதனால் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Tue, 03/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை