கிரிக்கெட் போட்டியின் பின் வீடு திரும்பியவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

பொகவந்தலாவை − செல்வகத்தை பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது சடலம் நேற்று முன்தினம் மாலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொகவந்தலாவை − செல்வகந்தை பகுதியைச் சேர்ந்த 18 வயதான பாரதிதர்ஷன் என்ற மாணவன்

பொகவந்தலாவை − சென்மேரீஸ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டியை கண்டு களித்து விட்டு வீடு திரும்பியபோது, காணாமல் போயுள்ளார்.

வெளியில் சென்ற மாணவனை நீண்ட நேரம் காணவில்லையென உறவினர்கள் தேடியபோது, மாணவனின் சடலம் கிணறொன்றில் கிடப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவன் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Tue, 03/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை