பயங்கரவாதத் தடுப்பு திருத்த சட்ட மூலத்துக்கு அனுமதி

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு கடந்த (11) வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் கூடிய வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவிலேயே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் முதலாவது வாசிப்புக்காக கடந்த பெப்ரவரி (10) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய திருத்தங்களுடன் கூடிய சட்டமூலத்துக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியிருப்பதுடன், இது குறித்த அறிக்கையை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் சமர்ப்பிப்பதற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக, மதுர விதானகே, (கலாநிதி) சுரேன் ராகவன், (பேராசிரியர்) சரித ஹேரத், இசுறு தொடங்கொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Tue, 03/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை