போக்குவரத்து விதிகளை மீறினால் அபராத பட்டியல் வீட்டுக்கு வரும்

புதிய நடைமுறை விரைவில் ஆரம்பம்

போக்குவரத்து விதி களை மீறுபவர்களின்  அபராதப் பட்டியலை வீடுகளுக்கு அனுப்பும் திட்டமொன்றை விரைவில் ஆரம்பிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

கொழும்பு நகர கண்காணிப்பிற்கான சீசீரீவி கண்காணிப்புப் பிரிவை அமைச்சர் அண்மையில் பார்வையிட்டார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது 2010ஆம் ஆண்டு இந்தப் பிரிவு               ஸ்தாபிக்கப்பட்டது. 

இந்த பிரிவின் முக்கிய கருப்பொருள் மக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பதாகும். 

மேலும், இந்த கண்காணிப்பு பிரிவின் மூலம் போக்குவரத்து கண்காணிப்பு மேற்கொள்வதாகும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மந்தகதியில் இருப்பதாகவும், இதனை தவிர்க்க மோட்டார் வாகன திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் இணைந்து குற்றவாளிகளின் வீட்டிற்கு விரைவில் அபராத பட்டியலை அனுப்பி வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டடார். (பா)

 

  

Mon, 03/07/2022 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை