மின் உபகரண பாவனையை கட்டுப்படுத்த வேண்டுகோள்

புத்தாக்க மின் உற்பத்தி அதிகார சபை கோரல்

நாட்டில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் இக்காலகட்டத்தில், மின் உபகரணங்கள் பாவனையை முடிந்தளவு கட்டுப்படுத்துமாறு புத்தாக்க மின் உற்பத்தி அதிகார சபை நாட்டு மக்களைக் கேட்டுள்ளது.

மின் உபகரணங்களை உபயோகிப்பவர்கள் அதுதொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியது அவசியமென, மேற்படி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார். அதேவேளை, மின்சாரம் அதிகளவு உபயோகப்படுத்தப்படும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலான காலத்தில் மின் உபகரணங்களை உபயோகிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் மக்களைக் கேட்டு ள்ளார். இக்காலத்தில் மின் உபகரணங்களை கொள்வனவு செய்வோர் அதுதொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தொடர்ந்தும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படுமென பொதுபயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க "ஏ" முதல் "எல்" வரையிலான வலயங்களில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளது. அந்த வலயத்தில் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையிலான காலப் பகுதியில் இரண்டு மணித்தியால மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. அதேவேளை, பி முதல் டபிள்யு வரையிலான வலயங்களில் முற்பகல் 8.30 மணிமுதல் பிற்பகல் 5.30 மணி வரை மூன்று மணித்தியால மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அந்த வலயங்களில் மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி முதல் இரண்டரை மணித்தியால மின்வெட்டு இடம்பெறுமென்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை