சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று இரவுடன் பூட்டு

இதேவேளை சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறுகிய காலத்தில் மூன்று தடவைகள் மூடப்பட்டமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (20) இரவு முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு போதுமான கச்சா எண்ணெய் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

ஆயினும் தேவையான கச்சா எண்ணெய் பல தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவுக்காக கோரியுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த, தொகை பெறப்படும் திகதி தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், கச்சா எண்ணெய் கிடைத்தவுடன் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவுடனான கடன் ஒப்பந்தத்தின் பிரகாரம், 20,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இன்று (20) இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 03/20/2022 - 10:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை