சிலாபம் கடலில் மூழ்கி நானுஓயா நபர்கள் இருவர் பலி

சிலாபம் பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் மெதவத்த பிரதேச கடற்கரை பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்ட 09 பேர் கடலில் நீராடச் சென்றுள்ளனர். அவர்களில் இருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடலில் மூழ்கிய மற்றுமொருவரை அந்த பகுதியிலுள்ள மீனவர்கள் மீட்டு சிலாபம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.  நானு ஓயாவைச் சேர்ந்த மருதை ராமசாமி என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையும் விஸ்வநாதன் என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையுமே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் தும்மலசூரிய கைத்தொழில் பேட்டை பகுதியிலிருந்து வந்தவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை