எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அரசு அவதானம்

நெருக்கடி நிலைக்கு இன்றுடன் தீர்வு கிட்டும் - -அமைச்சர் காமினி லொகுகே

எரிபொருள் விநியோக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைமைக்கு இன்றுடன் தீர்வு கிடைக்கப்பெறும். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள பின்னணியில் தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வலுசக்தி துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மின்னுற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை நேரடியாக பெற்றுக்கொள்ள இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டீசல்,பெற்றோல் மற்றும் உராய்வு எண்ணெய் இறக்குமதிக்கு தேவையான டொலர் முழுமையாக விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.

 

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை