பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் அந்நாட்டு பாராளுமன்ற தேசிய அவையில் நேற்று வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்படது.

பாராளுமன்றத்தின் நேற்றைய நிகழ்ச்சி நிரலின்படி, எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை முன்மொழிந்தனர்.

இந்த தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளும் கட்சி தரப்பும் தீர்மானத்தை நிறைவேற்ற எதிர்கட்சிகளும் முயற்சித்து வருகின்றன. தேசிய அவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற 172 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகள் தேவைப்படும்.

பாகிஸ்தானில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவு கொள்கையை இம்ரான் கான் தவறாக நிர்வகிப்பதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாகிஸ்தானில் இதுவரை எந்தவொரு பிரதமரும் தமது பதவிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 03/26/2022 - 07:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை