சீன விமான விபத்தின் உடல் பாகங்கள் மீட்பு

மலைப்பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை விழுந்து விபத்துக்குள்ளான சீனாவின் சைனா ஈஸ்டர்ன் ஜெட் விமானத்தில் இருந்தவர்களின் உடல் பாகங்கள் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை நிர்வாகம் இன்னும் உறுதி செய்யாதபோதும், விமானத்தில் இருந்த 132 பேரில் எவரும் உயிர் தப்பியதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தெற்கு சீனாவில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம் திடீரென்று செங்குத்தாக விழுந்து நொறுங்கியதற்கான காரணத்தை விசாரணையாளர்கள் இன்னும் கண்டறியவில்லை.

எனினும் விமானி அறையின் குரல் பதிவை கொண்ட கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நிலையில் விபத்துக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் கடும் மழை பொழிவது மீட்புப் பணிகளில் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

Fri, 03/25/2022 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை