இம்மாத இறுதியில் பசில் இந்தியாவிற்கு பயணம்

 

ஜெய்சங்கருடன் கலந்துரையாடிய பின் முடிவு

நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ மார்ச் மாத இறுதிப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கு தயாராகியுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு இந்தியா ஆதரவை வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

சுமுகமாகவும் மனப்பூர்வமாகவும் மிகவும் வினைத்திறனாக இந்த உரையாடல் இடம்பெற்றதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் திகதி ஒன்றை நிர்ணயித்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்வது குறித்தும் இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை