மூன்று சட்டமூலங்கள் நீதித் துறையில் இணைப்பு

கடந்த வாரத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 3 சட்டமூலங்களை சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன நேற்று அத்தாட்சிப்படுத்தியுள்ளார். இதற்கமைய அண்மையில் நிறைவேற்றப்பட்ட தனியார் தரவு பாதுகாப்பு, தொழிலாளர் இழப்பீடு மற்றும் காணி அபிவிருத்தி ஆகிய சட்டமூலங்கள் இவ்வாறு சட்டமாக்கப்பட்டு இலங்கையின் நீதித்துறையில் இணைக்கப்பட்டுள்ளன. குறித்த சட்டங்கள் நேற்று முதல் சட்டமாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது தொடர்பான தரவுத்தள வழங்குநர்களின் உரிமைகளை அடையாளம் கண்டு அதனை வலுப்படுத்தும் நோக்கில் தனியார் தரவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அத்துடன் தொழிலாளர் இழப்பீட்டு திருத்தச் சட்டத்தின் ஊடாக 550,000 ரூபாவாக காணப்பட்ட தொழிலாளர் இழப்பீட்டு தொகை 20 லட்சம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்பட்டது.

அது தற்போது பணிக்கும் செல்லும் போது அல்லது திரும்பும் போது ஏற்படுத்தும் விபத்துகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mon, 03/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை