கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தினால் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் அழைக்கப்பட்ட மற்றும் அதன் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 12 அரசாங்க நிறுவனங்கள் குறித்தே இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமையால் சமர்ப்பிக்கப்பட முடியாத இந்த அறிக்கையை இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கு கோப் குழு உறுப்பினர்கள் அனுமதி வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Wed, 03/09/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை