மனித உரிமை பேரவையில் சீனா வழங்கிய ஆதரவுக்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டு

கடந்த மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது சீனா வழங்கிய ஆதரவை நினைவு கூர்ந்துள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், உதவிகள் தேவைப்படும் போது எதிர்காலத்திலும் சீனா ஆதரவை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சீனத் தூதுவர் குய் சென்ஹோங்குடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை - சீன சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் தற்போதைய பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் 7வது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இலங்கையில் உள்ள அந்தந்த நிறுவனங்களின் ஆதரவுடன் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65ஆவது ஆண்டு நிறைவையும், 1952ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில் சீன அதிகாரிகளால் வெளியிடப்பட்ட முதல் நாள் அட்டைப்படம் சீனத் தூதுவரால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

Mon, 03/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை