முழுமையான தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் சுகாதார அமைச்சு தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்படுத்தல் அட்டை அத்தியாவசியமாகும் பிரதேசங்களின் பெயர்ப் பட்டியலை ஓரிரு தினங்களில் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பொது இடங்களில் பிரவேசிப்பதற்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி அட்டையை கண்டிப்பாக்கும் சட்டம் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை நாட்டில் ஒரு கோடி 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இரண்டு கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்களென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேவேளை மூன்றாவது தடுப்பூசியாக பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்றும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்பதாக மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை