ரஷ்ய அணு ஆயுதப் படை உஷார் நிலையில் வைப்பு

ரஷ்யாவின் அணுவாயுதப் படையை உச்ச உஷார் நிலையில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது இராணுவத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளார்.

நேட்டோ தலைவர்களின் காட்டமான அறிக்கைகளும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளும் அதற்குக் காரணம் என்று புட்டின் சாடினார்.

இந்த அறிவிப்பு ரஷ்யா அணு ஆயுதத்தை பயன்படுத்துவதாக பொருட்படாது.

இந்த முடிவை அமெரிக்கா உடன் கண்டித்ததோடு, ஏற்றுக்கொள்ள முடியாத பதற்றத்தை அதிகரிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளது. ரஷ்யாவின் அணுகுமுறை அபாயகரமானது, பொறுப்பற்றது என்று நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கண்டித்துள்ளார். உக்ரைனில் எவரேனும் எம்மை தடுக்க முயன்றால் நீங்கள் வரலாற்றில் காணாத விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று புட்டின் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ஞாயிறு மாலை தொலைக்காட்சியில் பேசிய ஜனாதிபதிபுடின், "மேற்கத்திய நாடுகள் நம்மை விரோதிகளாகக் கருதுகின்றன. பொருளாதார ரீதியாக நிறைய தடைகள் நம் மீது விதிக்கப்பட்டுள்ளன. இவை சட்டவிரோதமானவை. நேட்டோ நாடுகளும் நம் நாட்டுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அதனால், பாதுகாப்பு அமைச்சர் அணு ஆயுத தடுப்புப் படைகளை தயார் நிலையில் வைக்குமாறு நான் உத்தரவிடுகிறேன்" என்று கூறினார். இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அழுத்தமாக சரி என்றார். இந்த உத்தரவும், இசைவும் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளைக் கடத்தியுள்ளது. உலகிலேயே ரஷ்யாவிடம் இரண்டாவது பெரிய அணு ஆயுத பலம் உள்ளது.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை