புட்டினுக்கு நெருக்கமானோர் மீது அமெரிக்கா புதிய தடை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான நெருக்கமான உயர் அடுக்கைச் சேர்ந்த பல செல்வந்தர்களை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய தடை விதித்துள்ளது. இதில் ரஷ்ய ஜனாதிபதியின் ஊடகச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவும் அடங்குகிறார்.

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ரஷ்யாவுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் மற்றொரு நடவடிக்கையாகவே அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை புதிய தடைகளை விதித்துள்ளது.

இதில் 19 தன்னலக் குழுவினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 47 பேர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இதில் விசா கட்டுப்பாடுகள் மற்றும் சொத்துகள் முடக்கப்படுவது ஆகிய நடவடிக்கைகளும் அடங்கும். கூட்டணி நாடுகளின் ஒருங்கிணைப்புடன் இந்தத் தடை அமுல்படுத்தப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

“இந்த உயரடுக்கைச் சேர்ந்தவர்களில் ஒருவரான அலிஷர் புர்ஹோவிக் உஸ்மானோவ், ரஷ்யாவின் செல்வந்தர்களில் ஒருவர் என்பதோடு புட்டினின் நெருங்கிய கூட்டாளி” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Sat, 03/05/2022 - 07:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை