மேற்கு உக்ரைன் நகரில் ரஷ்யா கடும் தாக்குதல்

மேற்கு உக்ரைனின் லிவிவ் நகர் மீது கடந்த சனிக்கிழமை கடும் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக உக்ரைன் அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எண்ணெய் சேமிப்பு நிலையம் மற்றும் தொழிற்சாலை ஒன்றை தாக்கிய ரொக்கெட் குண்டுகளால் ஐந்து பேர் காயமடைந்ததாக லிவிவ் பிராந்திய ஆளுநர் மக்சிம் கொசிட்ஸ்கியி குறிப்பிட்டுள்ளார்.

லிவிவ் நகர் ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்களில் இருந்து தப்பிய பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு பெரும் எண்ணிக்கையான அகதிகள் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் லிவிவ் நகரில் இருந்து சுமார் 250 மைல்களுக்கு அப்பாலுள்ள அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விஜயம் மேற்கொண்ட நிலையிலேயே ரஷ்யாவின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. “போலந்தில் அமெரிக்க ஜனாதிபதி இருக்கும் நிலையில் இன்றைய கடுமையான தாக்கதல்கள் அவரை வரவேற்பதாக உள்ளது” என்று லிவிவ் நகர மேயர் அன்ட்ரி சடோவி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் ரஷ்யாவின் கடும் தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் லிவிவ் நகரே தப்பி வரும் அகதிகளுக்கான மையமாக மாறி உள்ளது. இந்த நகர் ஊடாகவே பெரும்பாலான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தத் தாக்குதல் பற்றி ரஷ்ய தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Mon, 03/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை