ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்குகளை அடையும் வரை தாக்குதல்கள் தொடரும்

- ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

- ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் படைகள்

- ரஷ்ய தாக்குதலில் இந்திய மாணவன் பலி

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் பாராளுமன்ற அதிகாரி நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நேற்று 06ஆவது நாளாக தொடர்ந்து வருவதுடன், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.

ஏற்கனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான  கார்கிவ்வின் மீதும் ரஷ்யப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றன.

இதேவேளை ரஷ்யத் தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்தே தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிகாரி தகவல் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உக்ரைன் மீதான போர் தொடருமென ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி நேற்று வெளியிட்ட செய்தியில்,

உக்ரைன் மீதான தாக்குதலிலிருந்து ரஷ்ய இராணுவம் பின்வாங்கப் போவதில்லை. மேற்கு நாடுகளின் அச்சுறுத்தலிலிருந்து ரஷ்யாவை பாதுகாப்பதற்கான இலக்கை அடையும் வரை தாக்குதல் தொடரும். மேலும், ஐரோப்பாவிலிருந்து அணு ஆயுதங்களை அமெரிக்கா அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் மீது ரஷிய இராணுவத்தினர் குண்டு மழை பொழிந்து வருவதாக அந்த மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய இராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் நாடுகளிக்கிடையே நேற்றுமுன்தினம் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனினும் நேற்று ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைனுக்குள் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது.

Wed, 03/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை