உக்ரைனில் ரஷ்யாவுடன் இணைய பெலாரஸ் தயார்

ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக பெலாரஸ் உக்ரைனுக்கு தனது படைகளை அனுப்ப தயாராகி வருவதாகவும் அது எதிர்வரும் மணி நேரங்களில் நிகழக் கூடும் என்றும் ‘கியேவ் இன்டிபென்டன்’ செய்தி நிறுவனம், தொடர்புபட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனிய படைகளுக்கு எதிராக ரஷ்ய படையுடன் பெலாரஸ் இணையும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் வொசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை பெலாரஸில் அணு ஆயுதங்கள் மற்றும் ரஷ்ய படைகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பின் முடிவு நேற்று வெளியானது. உக்ைரன் வடக்கு எல்லையில் இருக்கும் பெலாரஸ் ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாகும். ஆயினும், உக்ைரனுக்குள் படைகளை அனுப்ப மாட்டோம் என பெலாரஸ் ஐனாதிபதி அலெக்ஸாண்டர் லுகஷென்கோ உறுதியளித்ததாக உக்ைரன் ஐனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.

Tue, 03/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை