சீனாவில் மோசமாகும் கொவிட் சம்பவங்கள்

சீனாவில் கொரோனா தொற்று சம்பவங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை 5,280 ஆக உச்சத்தை தொட்டுள்ளது. இது அந்த நாட்டில் பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் பதிவான அதிகபட்ச தினசரி தொற்றாகும்.

வடகிழக்கு மாகாணமான ஜிலின் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. அங்கு 3,000க்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக தேசிய சுகாதார அணையம் குறிப்பிட்டுள்ளது.

அந்த மாகாணத்தில் உள்ள குறைந்தது 5 நகரங்கள் இம்மாதத் ஆரம்பத்தில் இருந்து மூடப்பட்டுள்ளன. அங்கு நோய்ப்பரவலைக் கையாள முறையான செயல்முறைகள் இல்லாததை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொழில்நுட்ப மையமான ஷென்ஸென் உட்பட, சீனாவில் 10 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. சுமார் 17 மில்லியன் பேர் வீடுகளில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சீனாவின் மொத்தம் 13 நகரங்கள் முடக்கப்பட்டிருப்பதோடு மேலும் பல நகரங்கள் பகுதி அளவு முடக்கப்பட்டுள்ளன.

2019 கடைசியில் மத்திய நகரான வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சீனா பொது முடக்கம் போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாகவும் புதிய தொற்று சம்பவங்கள் 1,000ஐ தாண்டியுள்ளது.

Wed, 03/16/2022 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை