ரஷ்ய தொலைக்காட்சியில் போரை எதிர்த்து கோசம்

ரஷ்யாவில் அதிகமானோர் பார்க்கும் இரவு நேர செய்தி ஒளிபரப்பின்போது, போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பிய ஊழியர் ஒருவர், 'போர் வேண்டாம்' என்று எழுதியிருந்த அட்டையை தூக்கிப் பிடித்துக் காட்டியுள்ளார்.

ரஷ்யாவின் அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள ஒளிபரப்பு நிறுவனமான் 'சனல் வன்' செய்தி ஒளிபரப்பின்போது இது நடந்தது.

நிறுவனம் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பும் 'டைம்' எனும் செய்தி நிகழ்ச்சி சோவியட் காலம் முதல் ரஷ்யாவின் மில்லியன் கணக்கானோரால் பார்க்கப்படும் நிகழ்ச்சியாகும். குறிப்பாக வயது முதிர்ந்த ரஷ்யர்கள் பலர் நிகழ்ச்சி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள்.

இந்த சம்பவம் கடுமையான பாதுகாப்பு அத்துமீறல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிபரப்புக்கு இடையே அட்டையைப் பின்புறம் காட்டிய மரினா ஓவிசியான்னிகோவா என்ற ஊழியர் அங்கு செய்தியாளராகப் பணிபுரிபவர். தற்போது அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

செய்தி தொகுப்பாளர் யோகடரினா பெலரஸுடன் ரஷ்யாவின் உறவு குறித்த செய்தியை வாசிக்கத் தொடங்கியபோது, ஓவிசியான்னிகோவா, தீடீரென்று நுழைந்து, போர் வேண்டாம் என்று எழுதியிருந்த அட்டையைக் காட்டினார்.

அதில் மேலும் "இவர்களது பரப்புரையைக் கேட்காதீர்கள். இங்கு அவர்கள் பொய்யுரைக்கின்றனர்." என்று எழுதி "போருக்கு எதிரான ரஷ்யர்கள்" என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.

உடனடியாக ஒளிபரப்பு மாற்றப்பட்டது.

Wed, 03/16/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை