கொவிட்: சீனாவில் சோதனை அதிகரிப்பு

சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சனிக்கிழமை 1,524ஆக அதிகரித்துள்ளது.  

வடகிழக்கின் சாங்சுன் நகரில் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டிருப்பதோடு அந்த நகரில் உள்ள ஒன்பது மில்லியன் மக்களுக்கும் கொரானா சோதனை நடத்தப்படவுள்ளது.  

சீனாவில் ஏறக்குறைய 19மாநிலங்களில் ஒமிக்ரோன், டெல்டா வகை திரிபுகள் ஏற்பட்டுள்ளன.  

கொவிட் தொற்றை முழுமையாக துடைத்தொழிக்கும் கொள்கையை பின்பற்றும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Mon, 03/14/2022 - 11:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை