ரஷ்யாவுக்கு எதிரான பகைமை கருத்துக்கு பேஸ்புக் அனுமதி

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் ரஷ்யாவுக்கு எதிராக வன்முறை கோரும் பதிவுகளுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சமூக ஊடகங்களை நிர்வகிக்கும் மெடா நிறுவனம் அது குறித்து நிர்வாக அளவில் அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களை ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிசெய்தது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லூகாஷென்கோ ஆகியோருக்கு மரணம் வரும்படிக் கோரும் பதிவுகள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பதிவுகளில் இடமோ, நடைமுறையோ குறிப்பிடப்படக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

ரஷ்யா, உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளில் மட்டும் அத்தகைய குறிப்புகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

போலந்து, ரஷ்யா, உக்ரைன், சுலோவாக்கியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு எதிராகப் பகைமையைத் தூண்டும் பதிவுகளுக்கு அனுமதி உண்டு. இருப்பினும், ரஷ்ய மக்களுக்கு  எதிராக வன்முறை செலுத்தும் இயக்கங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று மெடா குறிப்பிட்டது.

சமூக ஊடகங்களில் பகைமையைத் தூண்டும் பதிவுகள் பொதுவாகத் தடைசெய்யப்படும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கருத்தில்கொண்டு, விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

 

Sun, 03/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை