இன்றைய மின்வெட்டு: ABCDEFGHIJKL: 3½ மணி நேரம்; PQRSTUVW: 3 மணித்தியாலங்கள்

- மாகாண ரீதியான மின்வெட்டு பிரதேசங்களின் பட்டியல், மின்வெட்டு விலக்களிப்பு பிரதேசங்களின் பட்டியல் வெளியீடு

இன்றையதினம் (27) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையில் திருத்தம் மேற்கொண்டு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய அட்டவணையை, வெளியிட்டுள்ளது.

வார இறுதி நாட்களில் அதிகரித்துள்ள மின்சார பாவனை காரணமாக, மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய இன்று மு.ப. 9.00 மணி முதல் P,Q,R,S,T,U,V,W வலயங்களில் மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது

அதற்கமைய நாட்டை 20 வலயங்களாக பிரித்து  A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P,Q,R,S,T,U,V,W வலயங்களில் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளைய (27) மின்வெட்டு:

A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3½ மணித்தியாலங்கள்:
- மு.ப. 8.30 - பி.ப. 5.30 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்
- பி.ப. 5.30 - இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 15 நிமிடங்கள்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்:
- மு.ப. 9.00 - பி.ப. 3.00 வரை 1 மணித்தியாலம்
- பி.ப. 3.00 - இரவு 11.00 வரை 2 மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

 

(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்

 

Sun, 03/27/2022 - 09:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை