நியுசிலாந்தில் கரையொதுங்கிய 31 பைலட் திமிங்கிலங்கள் பலி

நியுசிலாந்து கடற்கரையில் கரையொதுங்கிய 31 பைலட் திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. திமிங்கிலங்கள் இறக்கும் மோசமான இடம் என்று அறியப்படும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தெற்கு தீவின் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்கரையில் இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை காண முடிந்ததாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் மீட்பாளர்களால் ஐந்து திமிங்கிலங்களை காப்பாற்றி கடலுக்கு மீண்டும் அனுப்ப முடிந்துள்ளது.

திமிங்கிலங்கள் கரையொதுங்கி இறக்கும் சம்பவங்களின் தொடர்ச்சியாகவே இது இடம்பெற்றுள்ளது.

திமிங்கிலம் கரை ஒதுங்குவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும், அவை இயற்கையான நிகழ்வு என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இவ்வாறு திமிங்கிலங்கள் கரையொதுங்குவதற்கான காரணம் தொடர்ந்து மர்மமாக உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நிகழ்ந்த மோசமான சம்பவத்தில் சுமார் 700 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய நிலையில் சுமார் 250 இறந்தன.

இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகள் திமிங்கிலங்கள் கரையொதுங்கிய 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Sun, 03/20/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை