25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் ஓரிரு தினங்களில் நாட்டுக்கு

- 21ஆம் திகதி கப்பல் வருகிறது என்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்

25 நாட்களுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் ஓரிரு தினங்களில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

114,000 மெட்ரிக் தொன் டீசலும், 60,000 மெட்ரிக் தொன் பெற்றோலும் இரண்டு வாரங்களில் கிடைக்கப்பெறும் என கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 40,000 மெற்றிக் தொன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று எதிர்வரும் 21 அல்லது 22 ஆம் திகதியில் நாட்டை வந்தடையவுள்ளது. மேலதிக டீசல் ஏப்ரல் மாதம் முதல் வார காலப்பகுதியில் கிடைக்கப்பெறவுள்ளது. எனவே நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பிரவேசிப்பவர்கள் முன்னர் தாம் பெற்றுக்கொண்ட அளவினை காட்டிலும், தற்போது அதிகளவில் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Fri, 03/18/2022 - 08:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை