2021 ஆம் ஆண்டின் சிறந்த விமானப்படை வீரர், வீராங்கனைகளுக்கான விருதுகள்

இலங்கை விமானப்படை நலனுக்காக தங்கள் தொழில்துறையை தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற காரணங்களை கொண்டு சிறந்த விமானப்படை வீரவீராங்கனைகளை தெரிவு செய்யும் விழா, கடந்த (14 ) விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் பங்கேற்பில் கட்டுநாயக்க ஈகிள்ஸ் லகுன் வீவ் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வுகள் பாரம்பரிய முறையில் தீபம் ஏற்றப்பட்டு 2 நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் விமானப்படையின் நடன குழுவினரின் கலாசார நடனமும் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் எயார் கொமடோர் லசித சுமணவீர அவர்களினால் விமானப்படைத் தளபதி உட்பட அனைத்து விருந்தினர்களும் வரவேற்கப்பட்டனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டில் தமது தொழில் பிரிவில் சிறந்த சேவையாளர்களை அந்தப் பிரிவின் பணிப்பகம் மூலம் தெரிவு செய்து, கடந்த வருடம் தங்கள் தொழிலைத் தாண்டி புதுமையான தயாரிப்புகளைக் கண்டறிதல் போன்ற விடயங்களில் ஈடுபட்ட சிறந்த படைவீரவீராங்கனைகளை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது .

இந்த ஆண்டு சிறந்த விமானப்படை வீரராக கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள விமான பழுதுபார்க்கும் படைப்பிரிவைச் சேர்ந்த மாஸ்டர் வாரண்ட் அதிகாரி ஈ.எம்.ஜீ.ஐ. தயாபெமாவுக்கும், சிறந்த விமானப்படை வீராங்கனையான வவுனியா விமானப்படை தளத்தில் 23 ஆம் ரெஜிமென்ட் படைப்பிரிவில் பணிபுரியும் கோப்ரல் விக்கிரமசிங்கவுக்கும் வெற்றிக்ேகாப்பை வழங்கப்பட்டது. இவர்களுக்கான வெற்றிகோப்பையை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஸன பத்திரன வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைப்படி இடம்பெற்றன.

Thu, 03/17/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை